1600 ஆவது நாளை நெருங்கும் போராட்டம்

1600 ஆவது நாளை நெருங்கும் போராட்டம் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும்  போராட்டமானது எதிர்வரும் திங்கள்கிழமை 1600ஆவது நாளை எட்டவுள்ளது.
எனவே  அந்த நாளைக் குறிக்கும் வகையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.
இன்று வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்ட பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”எதிர்வரும் திங்கள் 1600வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் செய்யவுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியம் GSP வரி சலுகையை பயங்கரவாத சட்டத்தை அகற்ற மட்டுமல்லாமல், அரசியல் தீர்விற்கும் பயன்படுத்த வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP வரி சலுகையை நிறுத்துவது பற்றிய பேச்சு இலங்கையை பதட்டப்படுத்துகிறது. இதனை இலங்கையின் நடவடிக்கைகளால் நாம் அறியக்கூடியதாகவுள்ளது.
1978 ல் பயங்கரவாத தடைசட்டம் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து, ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரசியல் கைதிகளாக சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இப்போது ஐரோப்பிய ஒன்றிய எச்சரிக்கையின் காரணமாக 76 சிங்களவர்களுடன் 16 தமிழர்களும்  சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியம் GSP வரி சலுகையை பயங்கரவாத சட்டத்தை அகற்ற மட்டுமல்லாமல், அரசியல் தீர்விற்கும் பயன்படுத்த வேண்டும். யுத்தத்தின் போது இலங்கை ஐ.நா மற்றும் இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்களுக்கும் 2009 ல் அரசியல் தீர்விற்கும் உறுதியளித்தது.
ஐரோப்பிய ஒன்றியம், ஜனாதிபதி பைடன் நிர்வாகத்தின் ஆசீர்வாதத்துடன் இலங்கையில் அரசியல் தீர்வை அடைய முடியும். தமிழர்களிடையே “பொது வாக்கெடுப்பு” எடுப்பதன் மூலம் இந்த தீர்வை அடைய முடியும்.
எந்தவொரு தீர்வும் பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தமிழ் தாயகத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்திற்குள் மட்டுமே தமிழர்கள் பாதுகாப்பாக வாழ முடியும் என்பதை கடந்த 74 ஆண்டுகளாக தமிழர்கள் கற்றுக் கொண்டனர்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 1600 ஆவது நாளை நெருங்கும் போராட்டம்

This week ilakku Weekly Epaper 136 June 27 2021 1600 ஆவது நாளை நெருங்கும் போராட்டம்