இலங்கையில் கடந்த 6 மாதங்களில் வீதி விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழப்பு

88 Views

2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகள் காரணமாக 1,459 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 1,387 பாரிய வீதி விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் 3,326 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் 4,309 சிறு விபத்துகளும், 2,229 விபத்துக்களில் சொத்துக்களுக்கான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் திடீரென வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததினால் விபத்துக்கள் மிகக் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply