மென் கடத்திகள் உற்பத்தியில் இந்தியா பின்தங்கியுள்ளது

நாட்டில் தாய்வானின் மென்கடத்தி உற்பத்தி நிறுவனம் தொழிற்சாலை ஒன்றை நிறுவியதால் இந்தியாவின் மென்உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த வலுவுள்ள கடத்திகளை உற்பத்தி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இலத்திரனியல்துறையில் புதிய யுகத்தை உருவாக்கப்போவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்தபோதும்இ இந்தியாவின் 3 பில்லியன் டொலர்கள் பெறுமதியான மென்கடத்தி உற்பத்தித்துறை பின்னடைவையே சந்தித்துள்ளது.

அமெரிக்காவின் மைக்ரோன் நிறுவனம் இந்தியாவில் 825 மில்லியன் டொலர்கள் முதலீடுகளை மேற்கொள்ள உடன்பட்டாலும், அது மென்கடத்திகளை பரிசோதிப்பது மற்றும் பொதி செய்யும் தொழில்நுட்பத்தையே வழங்கவுள்ளது. உற்பத்தி தொழில்நுட்டபத்தை வழங்கவோ உற்பத்தியை மேற்கொள்ளவே அது விரும்பவில்லை.

தற்போது தாய்வானின் ASE Technology  நிறுவனமும், சீனாவின் JCET நிறுவனமுமே மென்கடத்திகள் விற்பனையில் சந்தைவாய்ப்பை பிடித்துள்ளன. அதன் உலக சந்தைவாய்ப்பு 2028 ஆம் ஆண்டு  51 பில்லியன் டொலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.