183 Views
10 இலட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்
உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகும் மக்களின் எண்ணிக்கை 10 இலட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக, ஐநா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ தாக்குதலை தொடங்கிய 7 நாட்களில் 10 இலட்சம் வரையானோர் வெளியேறியுள்ளனர்.
அகதிகளுக்கான ஐநாவின் உயர் ஆணையர் ஃபிலிப்போ கிராண்டி “துப்பாக்கிகள் மௌனமாக வேண்டும். இதனால், உக்ரைனில் இன்னும் இருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு உயிர்காக்கும் மனித நேய உதவிகளை வழங்க முடியும்” என, தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா நெருக்கடியால், உக்ரைனில் சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் பேர் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்வார்கள் என்றும், அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படும் என்றும் இந்த ஆணையம் கணித்துள்ளது.