தொடர் மின்தடைக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கை

263 Views

தொடர் மின்தடை

இலங்கையில் தொடர் மின்தடை அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தொடர் மின்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி A9 வீதி சந்தி மற்றும் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் இன்று(வியாழக்கிழமை) இரவு 8.30 மணிக்கு இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் தங்களது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளனர்.

தற்பொழுது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் மக்கள் அன்றாடம் பல பாதிப்புக்களுக்கு உள்ளாவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை எதிர்க்கும் முகமாக இன்று 8.30 மணிக்கு செம்மணி A9 வீதி சந்தி மற்றும் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு, பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் அனைத்து மக்களும் தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டும் முகமாக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் சகிதமாக வருகை தந்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply