முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள போர் நினைவிடத்திற்கு முன்பாக இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பாக, விமல் வீரவங்சவுக்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வீரவங்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான பின்னணியில், எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அதே நேரம் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தான் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



