வவுனியா தனியார் பேரூந்தில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம்.

வாரிக்குட்டியூரிலிருந்து வவுனியா செல்லும் தனியார் பேரூந்து ஒன்றில் இரண்டு நடத்துனர்கள் அமர்த்தப்பட்டு பயணிகளுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்படுவதுடன் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்புக்கள் இன்றி பேரூந்தின் பிரதான வாயிலிருந்து பயணிக்கவேண்டிய நிலையும் அதிக சத்தத்துடன் சினிமாப்பாடல்கள் ஒலிபரப்புவதால் பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகம் பயணிகளை தகாதவார்த்தை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பயணிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாரிக்குட்டியூரிலிருந்து வவுனியா செல்லும் தனியார் பேரூந்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதிய பாதுகாப்புக்கள் இன்றி வாசலில் தொங்கி நின்றவாறு பயணிப்பதாகவும் இரு நடத்துனர்கள் ஒரு பேரூந்தில் கடமை மேற்கொள்வதால் பயணிகளுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.

வயதானவர்களிடம் தரக்குறைவான வார்த்தைப்பிரயோகம் பாடசாலை செல்லும் மாணவர்கள் நோயாளர்கள், இளைஞர், யுவதிகள் எனப்பலரும் பயணம் மேற்கொள்ளும் பேரூந்தில் சினிமாப்பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிபரப்பி வருகின்றனர். நீண்ட நேரங்கள் காத்திருக்கவேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.

வாரிக்குட்டியூரிலிருந்து 6.30 க்கு வவுனியா நோக்கி செல்லும் பேரூந்து வழமையான வழிப்பயணங்களை மேற்கொள்ளாமல் அதற்கப்பால் பல இடங்களைச் சுற்றி கால நேரத்திற்கு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதில்லை. இதனால் பலருக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.

இவ்வாறான பேரூந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பேரூந்தில் பயணிக்கும் பயணிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

IMG 63f0132eb07867e3212de35da3984539 V வவுனியா தனியார் பேரூந்தில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம்.

IMG 63f0132eb07867e3212de35da3984539 V 1 வவுனியா தனியார் பேரூந்தில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம்.