வளைகுடா பகுதியில் ஈரான் இராணுவப் பயிற்சி அமெரிக்கா விசனம்

வளைகுடாப் பகுதியில் ஈரான் இராணுவப் பயிற்சி மேற்கொள்வதானது பொறுப்பற்ற செயல் என அமெரிக்கா விசனம் தெரிவித்துள்ளது.

வளைகுடாக் கடற்பகுதியில் ஈரான் விமானப் பயிற்சியையும், ஏவுகணைப் பயிற்சியைம், நடத்தி வருகின்றது. சர்வதேசக் கடற்பகுதியில் ஈரான் இதுபோன்ற செயல்களை மேற்கொள்வது பொறுப்பற்ற செயலாகும் எனவும், இது போன்ற செயல்களை தாம் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ஈரானிடையே அணு ஆயுத சோதனை தொடர்பாக மோதல் வலுத்து வரும் இவ்வேளையில், சௌதி அரேபியாவிற்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இதே போன்று இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வருவதால், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதும் அதன் முக்கிய தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை ட்ரம் அறிவித்திருந்தார். இந்த தடையை நீக்கும்படி ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்தப் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானின் பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளானது. இதனால் பொதுமக்கள் பலர் ஈரான் அதிபர் ஹஸன் ரவ்ஹானியின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.