ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் உரையாடுவது போன்ற வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி (56) உச்ச தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.



