வடக்கை அச்சுறுத்தும் கொரோனா! யாழில் 61 பேர் உட்பட வடக்கில் 95 பேருக்கு தொற்று

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 61 பேர் உட்பட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 95 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 42 பேர் உட்பட வடக்கில் 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 42 பேர்

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர்,
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர்,
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் 05 பேர்,
சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 04 பேர் (நால்வரும் தொற்று அறிகுறிகளுடன் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காகச் சென்றவர்கள்)
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்டத்தில்

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 12 பேர்,
கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 05 பேர்

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர்,
முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர்,
மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

வவுனியா மாவட்டத்தில் 02 பேர்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஒருவர்,
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்டத்தில் 05 பேர்

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஐவர்
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.குடாநாட்டைச் சேர்ந்த 19 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.