வடக்கும் – கிழக்கும் இந்தியா வசம் சென்றுள்ளதா?

சிறீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு போர் நிறைவடைந்த பின்னர் சிறீலங்கா அரசை தமது கட்டுப்பாட்என் கீழ் கொண்டுவருவதில் பிராந்திய வல்லரசுகளும், மேற்குலகமும் கடுமையான போட்டிகளில் இறங்கியிருந்தன. ஆனால் தற்போது இந்த போட்டியில் சிறீலங்காவின் பிரதேசங்கள் பகுதி பகுதியாக பறிபோயுள்ளதாக சிறீலங்கா தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டையை சீனா தன்வசப்படுத்தியுள்ள நிலையில் திருமலைத் துறைமுகத்திற்காக அமெரிக்கா போராடி வருகின்றது. ஆனால் சத்தமின்றி வடக்கையும், கிழக்கையும் இந்தியா தன்வசப்படுத்தியுள்ளது.

போர் நிறைவடைந்ததும், யாழ்ப்பாணத்தில் தனது தூதரகத்தைத் திறந்த இந்தியா, அதன் பின்னர் இந்தியாவில் இருந்து சிவசேனை என்ற இந்துக் கட்சியை யாழில் களமிறக்கியிருந்தது. தற்போது இந்து மாநாடு என்ற போர்வையில் இந்தியாவில் இருந்து சாமிகளை அழைத்து வந்து மாநாடு ஒன்றை நடத்திவருகின்றது.

அதேசமயம், பலாலி மற்றும் மட்டக்களப்பு வானூர்தி நிலையங்களையும் அபிவிருத்தி என்ற போர்வையில் இந்தியா கையகப்படுத்தியுள்ளது. அதாவது தென்னிலங்கை சிங்கள மக்களின் அறிவுக்கு எட்டாது மெல்ல மெல்ல இந்தியாவின் ஆக்கிரமிப்பு வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்றது, அதனை சிறீலங்கா அரசு அனுமதித்துள்ளது என்பதை விட கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல் அவர்களை அனுமதிக்க வைத்துள்ளது என்றே கூறலாம் என அரசியல் அவதானி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.