வடகொரிய அதிபரின் புதிய புகைப்படங்கள் வெளியாகின

வடகொரிய அதிபர் கோமா நிலையில் இருப்பதாகவும், அவரின் பொறுப்புக்கள் யாவும் அவரது சகோதரியிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகிய செய்திகளுக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் வடகொரிய அதிபரின் சமீபத்திய புகைப்படங்களை அரசு வெளியிட்டுள்ளது.

வடகொரிய அதிபர் கிம் டே ஜங்கின் முன்னாள் உதவியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிம் அவர்கள் கோமாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், தொழிலாளர் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் அதன் தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட புதிய படங்களை வடகொரிய அரசு ஊடகங்கள் செவ்வாயன்று வெளியிட்டன.

கடந்த சில மாதங்களிற்கு முன்னர் அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்ததாக வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்து இதேபோல் புகைப்படங்களை வடகொரியா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.