அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலையில்

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நவம்பர் 03ஆம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் வேட்பாளர்களாக ஜனநாயகக் கட்சி ஜோ பைடனை தெரிவு செய்தது. குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இருவருக்குமான வாக்கு வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ஜுலை 26ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 25ஆம் திகதி வரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி ஜோ பைடன் 52 வீதத்தையும் ட்ரம்ப் 42 வீதத்தையும் பெற்றுள்ளனர். இந்த தகவல்களையடுத்து ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.  இதனையடுத்து பிரச்சாரங்களில் திடீர் மாற்றம் செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.