லிபியாவில் படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி

லிபியா நாட்டின்  கடல்  பகுதியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 43 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்துக் குறித்து தெரியவருவதாவது,
லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு மேற்கே கடற்கரை நகரான ‌ஷவையா உள்ளது. இந்த நகரில் இருந்து ஒரு படகில் அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதில் அதிக எண்ணிக்கையில் அகதிகள் இருந்தனர். இந்த படகு நடுக்கடலில் வேகமாக சென்று கொண்டிருந்தது. சில மணி நேரம் பயணித்த நிலையில் திடீரென்னு படகின் என்ஜின் பழுதாகி நின்றது.
இதனால் நிலை தடுமாறிய அந்த படகு கவிழ்ந்தது. இதில் அந்த படகில் இருந்த அகதிகள் கடலில் விழுந்தனர். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் படகில் பயணித்த பெரும்பாலானோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒருசிலர் நீந்தி உயிர் தப்பினார்கள்.
இந்த விபத்தில் 43 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். 10 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஏற்கனவே இந்த பகுதியில் இதுபோன்ற விபத்துக்கள் பலமுறை நடந்துள்ளன. இந்த ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியில் படகு கவிழ்ந்து அகதிகள் உயிரிழந்தது இதுவே முதல்முறை ஆகும்.