“லிட்டில் இந்தியா” –வில் வெடிப்பு சம்பவம்- பயங்கரவாத செயலா?

லண்டனில் உள்ள செளத்ஆல் பகுதியில் உள்ள கடையில் ஒன்றில் எரிவாயு வெடித்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்து நான்கு ஆடவர்கள், ஒரு சிறார் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு லண்டனில் உள்ள செளத்ஆல் பகுதி, தெற்காசியர்கள் அதிகம் வாழும் இடம். அங்கு பஞ்சாபியர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். இதனால் இந்த பகுதியை உள்ளூர்வாசிகள், “லிட்டில் இந்தியா” (சிறிய இந்தியா) என்று அழைக்கிறார்கள்.

இங்குள்ள சந்தை பகுதிகளில் தொடர்ச்சியாக கடைகள் உள்ளன. இதில் ஒரு செல்பேசி கடை மற்றும் சிகை திருத்தகத்தில் பிரிட்டன் நேரப்படி காலை 6.30 மணியளவில் வெடிச்சம்பவம் நடந்ததாக தெரிய வந்துள்ளது.

எனினும், வெடிச்சம்பவத்தை தீவிரவாத செயலாக கருதவில்லை என்றும் இது எரிவாயு வெடிப்பால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பெருநகர காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.