லண்டனுக்கான விமான சேவையை நிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு மின்சாரத்தை வழங்கும் அதன் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து அந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹீத்ரோ விமான நிலையத்திற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சகல விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, இன்று (21) மதியம் 12:50 அளவில் பயணத்தை லண்டன் நோக்கி ஆரம்பிக்கவிருந்த விமான சேவை மற்றும் இரவு 20:40 அளவில் கொழும்பு நோக்கி பயணக்கவிருந்த விமான சேவை என்பன ரத்தாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ‘சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.  பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

அங்கு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
ஹீத்ரோ மீண்டும் திறக்கப்பட்டவுடன் லண்டனுக்கு மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்’ என்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.