இலங்கையின் குடித் தொகையில் 52 சதவீதமும் வாக்காளர் தொகையில் 56 சதவீதமும் பெண்கள் ஆவர். எனினும் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 22 பெண் பிரதிநிதிகளே உள்ளனர். இது 9.8 வீதம் ஆகும். உலக அளவில் நாடாளுமன்றப் பெண் பிரதிநிதித்துவ வரிசையில் 193 நாடுகளில் இலங்கை 135 ஆவது இடத்தில் உள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.



