வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை – குழுவொன்றும் நியமிப்பு

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக மூவர் அடங்கிய குழுவொன்றுநியமிக்கப்பட்டுள்ளது.

அங்கு இடம்பெறுவதாக கூறப்படும் பகிடிவதைகள், ஆசிரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

பெயரை வெளிப்படுத்த விரும்பாத மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

‘இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கல்லூரியின் ஆணையாளருக்குஅறிவுறுத்தப்பட்டது’ என்று அவர் குறிப்பிட்டார். ‘அத்துடன் குறித்த விசாரணைக்குழு கல்வியியற் கல்லூரிநிர்வாகத்தினர் அல்லாத மூன்றாம் தரப்பினரின் பங்கு பற்றுதலுடன் உருவாக்கப்பட வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டது’. அதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில்ஆராய்வதற்கு மூவரங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதென தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்தெரிவித்தார்.