ரோஹிங்கியா அகதிகளை தனித்தீவுக்கு கொண்டு செல்லும் வங்கதேசம்

மனித உரிமை அமைப்புகள் அறிவுரைகளை மீறி Bhasan Char எனும் தனித்தீவுக்கு ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை அழைத்துச்செல்ல வங்கதேசம் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்காள விரிகுடா கடல் பகுதியில் 2006 ஆண்டு முதல் தென்படும் இத்தீவு, இதுவரை மனிதர்கள் வாழ்ந்திராத தீவுப்பகுதியாகும். இது புயல் மற்றும் மழைக்காலங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவும் இருந்து வருகின்றது.
முதல்கட்டமாக, இத்தீவுக்கு 1,600 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.