ராஜபக்ஸக்களின் யாழ். விஜயமும் தமிழ் மக்களின் எதிர்ப்புகளும்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு இன்று(28)  விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாழ். வந்துள்ள கோத்தபயா ராஜபக்ஸ நல்லை ஆதீனத்திற்குச் சென்றார். அதன் பின்னர் யாழில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டங்களில் மகிந்த ராஜபக்ஸவும் கலந்து கொண்டார்.

இந்தப் பிரச்சாரக் கூட்ட நிகழ்வில் சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், யாழ். விஜயத்தை மேற்கொண்ட கோத்தபயா ராஜபக்ஸ, முதலில் நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து ஆசி பெற்றதுடன் அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

nallur atheenam ராஜபக்ஸக்களின் யாழ். விஜயமும் தமிழ் மக்களின் எதிர்ப்புகளும்இது தொடர்பாக ஆதீன முதல்வர் பத்திரிகையாளர்களிடம் கருத்து வெளியிடும் போது, தான் ஆட்சிக்கு வந்தால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதாக கோத்தபயா ராஜபக்ஸ தன்னிடம் கூறியதாக   பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், வடக்கில் அபிவிருத்தி ஊடாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். குறிப்பாக புதிய பாரிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதிகளவான வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். வேலை வாய்ப்பு இல்லாமையினால் தான் வடக்கில் இளைஞர்கள் குழம்புகின்றனர்.

மற்றும் 5 தமிழ் தேசியக் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஆதீன முதல்வரிடம் கோத்தபயா கூறியுள்ளார்.

அதற்கு ஆதீன முதல்வர், நீங்கள் தமிழ்க் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துப் பேச வேண்டும். அத்துடன் இது தமிழ் மக்களின் விருப்பமாகும். மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர் எனக் கூறியதாக பத்திரிகையாளர்களிடம் ஆதீன முதல்வர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ராஜபக்ஸக்களின் யாழ். விஜயத்தை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ். சங்கிலியன் பூங்கா முன்பாக ஒன்று திரண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோத்தபயாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91 ராஜபக்ஸக்களின் யாழ். விஜயமும் தமிழ் மக்களின் எதிர்ப்புகளும்இதன்போது கோத்தபயாவே வெளியேறு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே? முதலாளி கோத்தாவே வெளியேறு, எமது மக்களைக் கடத்தாதே, ஐ.நா.அமைதிப்படையே வா, சர்வதேச  நீதிமன்றில் நிறுத்து, இனப்படுகொலையாளி மகிந்த, கோத்தாவை கைது செய், பக்கச் சார்பற்ற விசாரணையை நடத்து உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.