மியான்மர் இராணுவத்திற்கு ஐ .நா எச்சரிக்கை

போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்கான விளைவுகளை மியான்மர்  சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து  ஐ.நாவின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறும்போது, “மியான்மரில் அமைதியாகப் போராடுபவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடுக்கை எடுத்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்தார்.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, இராணுவம் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து இராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஆனால் இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என எச்சரித்திருந்தது.

இந் நிலையில், போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்கான விளைவுகளை மியான்மர்இராணுவம் சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.