மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்பு:  இராணுவத்தால் முக நூல் முடக்கம்

மியான்மரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆங் சாங் சூகி, இராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது தன் இராணுவம். எவ்வாறு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் பிரச்னையின் போது ரஷ்யாவோடு சேர்ந்து கொண்டு மியான்மரை சர்வதேச விமர்சனங்களிலிருந்து சீனா மியானமரைக் காப்பாற்றியதோ,அதையேதான் இப்போதும் செய்கின்றது.

இந்நிலையில்,மியான்மரில் சமூகவலைத்தளமாக முகநுால் பயன்பாட்டுக்கு அந்நாட்டு இராணுவம் தடை விதிக்க உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மியான்மரில் முகநூலைப் பயன்படுத்த முடியவில்லை எனப் பயனர்கள் தெரிவித்தனர். மியான்மரில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான எதிர்ப்பை ஒருங்கிணைக்கும் முகநுால் பக்கத்துக்கு 10,000-க்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு மியான்மர் மக்கள் தங்கள் எதிர்ப்புக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

இந்த சூழ் நிலையில், மியான்மரில் அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என ஐ.நா சபையின் பொதுச் செயலர் அன்டொனியோ குட்டாரெஷ் அழைப்பு விடுத்திருக்கிறார்.