மறைந்த ஆயரின் திருவுடல் இன்று நல்லடக்கம்- கறுப்பு கொடி கட்டி துக்க தினம் அனுஸ்டிப்பு

மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர்  இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அவரது திருவுடல் தற்போது மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரின் திருவுடல் மன்னார் ஆயர் இல்லத்திலிருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இன்று பிற்பகல் 2 மணி வரையில் அவரது திருவுடல் அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டு 3 மணியளவில் இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன், ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IMG 0906 மறைந்த ஆயரின் திருவுடல் இன்று நல்லடக்கம்- கறுப்பு கொடி கட்டி துக்க தினம் அனுஸ்டிப்பு

இந்நிலையில், மன்னார் மறைமாவட்டத்தின் ஆஜராக சேவைபுரிந்து காலமான  இராயப்பு யோசெப்பிற்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

IMG 0956 மறைந்த ஆயரின் திருவுடல் இன்று நல்லடக்கம்- கறுப்பு கொடி கட்டி துக்க தினம் அனுஸ்டிப்பு

வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கறுப்புகொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கதினமும் அனுஸ்டிக்கப்பட்டது.

IMG 0951 மறைந்த ஆயரின் திருவுடல் இன்று நல்லடக்கம்- கறுப்பு கொடி கட்டி துக்க தினம் அனுஸ்டிப்பு

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், எமது இனத்திற்காகவும், நீதிக்காவும் போராடிய உன்னதமான மனிதராக அவர் இருந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் என்றவகையில் அவரது மரணம் எமக்கு பேரிழப்பாகவே இருக்கிறது. அதனை ஈடுசெய்ய எவராலும் முடியாது. அவரது உயிர் பிரிந்தாலும் அவர் எம்மோடு என்றும் பயணிப்பார்” என்றனர்.