இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: 44 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.

மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வெள்ளப்பெருக்கு இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிழக்கு Flores தீவில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்  பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப் படையினர் 41 சடலங்களையும், காயமடைந்த 5 பேரையும் மீட்டதாக உள்ளூர் பேரிடர் அமைப்பின் தலைவர் லென்னி ஓலா தெரிவித்துள்ளார்.

மேலும் ஓயாங் பயாங் கிராமத்தில்    நீரில் மூழ்கிய வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.அவர்களில் சிலர் வெள்ளநீரால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.