பிரேஸிலில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 881 பேர் பலி

பிரேஸிலில் நேற்று ஒரே நாளில் – கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 881 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அதிக பாதிப்புகளை கொண்ட ரஷ்யா அடுத்ததாகவும், பிரேசில் 7 ஆவது இடத்திலும் உள்ளது.

கடந்த சில நாள்களாக பிரேஸில் நாட்டில் கொரோனா பாதிப்பு கோர தாண்டவம் ஆடுகிறது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 881 பேர் பலியாகினர். இதனால் நாட்டில் மொத்த கொரோனா பலிகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள சுமார் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையயாட்டி, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 77 லட்சத்து 589ஆக உள்ளது. இதுவரை சுமார் 72 ஆயிரத்து 597 லட்சம் பேர் குணமடைந்தனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.