பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளில் இராணுவத் தளங்களை நிறுவ சீனா முயற்சி

பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளில் சீனா இராணுவத் தளங்களை நிறுவ முயற்சித்து வருவதாக அமெரிக்க பென்ரகன் தெரிவித்துள்ளது.

பென்ரகன், அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் சீனா தொடர்பான இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து 200 பக்கம் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் கடந்த ஆண்டு வூஹானில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தளவாட தளங்களை அமைப்பதற்கும், பாகிஸ்தான், இலங்கை, மியான்மார் உள்ளிட்ட 12 நாடுகளில் சீனா இராணுவ வசதிகளை நிறுவ முயற்சித்து வருகின்றது. 350 வரையான போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள், 130  பெரிய போர் விமானங்களை உள்ளடக்கியது. அமெரிக்க கடற்படையின் படை நிலை 293 போர்க்கப்பல்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.

தாய்லாந்து, சிங்கப்புர், இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, சீஷெல்ஸ், தான்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவை சீனாவின் இராணுவத் தளங்களை அமைப்பதற்கான ஏனைய நாடுகளாகும்.