சீனா அதன் அண்டை நாடுகளை துன்புறுத்த முயல்கிறது – அமெரிக்கா

சீனா தன் அண்டை நாடுகளை துன்புறுத்த முயல்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், தனது சொந்த மக்களை அடக்குவதற்கும், அதன் அண்டை நாடுகளைத் துன்புறுத்துவதற்கும் சீனா முயல்கிறது.  உள்நாடு மற்றும் சர்வதேச விவகாரங்களில் சீனாவின் ஆக்ரோஷம் கவலைக்குரியது. இதனை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றோம் என்று கூறியுள்ளார்.

தென்சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவிற்கிடையே மோதல் நிலை காணப்படுகின்றது. அத்துடன் இந்த விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவிற்கே ஆதரவு வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, சீனாவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் தென்சீனக் கடல் பகுதிக்கு அமெரிக்கா கடந்த ஜுலை மாதம் 2 போர்க் கப்பல்களை அனுப்பி பயிற்சியில் ஈடுபட்டது.

இதற்குப் பதிலாக தென் சீனக் கடல் பகுதியில் 2 ஏவுகணைகளைச் செலுத்தி போர்ப் பயிற்சி மேற்கொண்டது. இதனையடுத்து தென்சீனக் கடல் பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.