பல்கலைக்கழக இறுதி ஆண்டு பரீட்சைகள் ஜூன் 22 ஆரம்பம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியகளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதுதொடர்பாக தெரிவிக்கையில் அனைத்து பல்கலைக்கழக பீடங்களின் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்வதற்கு உப வேந்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தயிருப்தாக கூறினார்.

பல்கலைக்கழக மானிய ஆணைக குழு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பிரிவுகளின் பிரதானிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பல கட்டங்களின் கீழ் பரீட்சைகளை நடத்துவதற்கும் பரீட்சைக்கான நேர அட்டவணையைத் தயாரிப்பதற்கும், மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள் சுகாதாரப் பாதுகாப்புக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் மாணவர்களுக்கு வழங்குவதற்கும் உடன்பாடுகாணப்பட்டதாக கூறினார்.

ஊடகக் கலந்துரையாடலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:

முதல் நடவடிக்கையாக அனைத்து பீடங்களின் மாணவர்களுக்கான இறுதி வருட மருத்துவ பட்டப் பரீட்சை (Final MBBS) 2020.06.15 முதல் ஆரம்பமாகின்றது.

2020 ஜுன் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஏனைய பீடங்களின் இறுதி வருட பரீட்சை நடவடிக்கை மாத்திரம் ஆரம்பமாவதுடன் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்த பரீட்சைகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தந்த பல்கலைக்கழக உபவேந்தர்களினால் அந்தந்த பீடங்களுக்கு அமைவாக இறுதி வருட பரீட்சைக்கு மாணவர்கள் அழைக்கப்படும் தினம் தனித்தனியாக அறிவிக்கப்படும்.

ஆசன ஒதுக்கீடு, எழுத்து மூல பரீட்சை நடத்துப்படும் பொழுதும்; செயல்முறை சார்ந்த பரீட்சைகள் நடைபெறும் சந்தர்ப்பத்திலும் பங்குகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவது சுகாதார விதிகளுக்கு அமைவாகவேயாகும்.

இந்த காலப்பகுதியில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வரும் பொழுது முடிந்தவரையில் தமது வீடுகளில் இருந்து வரக்கூடிய ஆற்றல் குறித்த மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மீள அறிவிக்கும் வரையில் விடுதி வசதிகளை மேற்கொள்ளும் பொழுது ஒரு மாணவருக்கு ஒரு அறை என்ற வீதம் ஒதுக்கப்பட வேண்டும்.

மீள அறிவிக்கும் வரையில் அனைத்து மாணவர்களும் இரவு 7 மணிக்குப் பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து (நூல் நிலையம் உள்ளிட்டவை) வெளியேற வேண்டும்.

மீள அறிவிக்கும் வரையில் பல்கலைக்கழகத்திற்குள் அல்லது வெளியில் யாரையாவது அல்லது எந்தவகையிலும் மாணவர்கள் ஒன்றுகூடுவது தடையாகும்.

மீள அறிவிக்கும் வரையில் எந்தவகையிலும் பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

கல்வி நேர அட்டவணைகளை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்கு அனைத்து உபவேந்தர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

பல்கலைக்கழகங்களில் அனைத்து நிர்வாக அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்.

முதுகலை ஆய்வு மாணவர்களின் கல்வி நடவடிக்கை சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக ஆரம்பிக்கப்படும்.

இந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவது கொவிட் 19 வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதர வழிகாட்டிகளுக்கு அமைவாக அனைத்து தரப்பினராலும் முழுமையான ரீதியில் கடைபிடிப்பதற்கு உட்பட்டதாகும்.