பொதுமக்கள் திருமணத்திற்காக ஓராண்டுக்கு, தங்கம் வாங்க வேண்டாம் என்றும், வெளி நாட்டு சுற்றுலாவைத் தவிக்க வேண்டும் என்றும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் எனவும் இந்திய பிரதமர் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் பெற்றோல், டீசலை கவனமாகப் பயன்படுத்துங்கள் மேற்கு ஆசிய நெருக்கடியின் பின்னணியில், பெற்றோலியப் பொருட்களைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.
தெலுங்கானாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி மற்றும் தொடங்கி வைத்து உரையாற்றிய மோடி, இறக்குமதி செய்யப்படும் பெற்றோலியப் பொருட்களைத் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இது அந்நியச் செலாவணியைச் சேமிப்பது மட்டுமல்லாமல், போரினால் ஏற்படும் மோசமான பாதிப்புகளைக் குறைக்கவும் உதவும் என்றும் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் சூரிய சக்தி உற்பத்தியில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதைக் குறிப்பிட்ட அவர், பெற்றோலில் எத்தனால் கலப்பதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முதலில் 100 சதவீத எல்பிஜி (LPG) இணைப்பை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியது, தற்போது குறைந்த விலையில் குழாய் மூலம் எரிவாயு வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
சிஎன்ஜி (CNG) அடிப்படையிலான அமைப்பையும் அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. இத்தகைய முயற்சிகளால், உலகில் நிலவும் பெரும் எரிசக்தி நெருக்கடியை இந்தியா சமாளித்து வருவதாக அவர் கூறினார்.
“இருப்பினும், இன்றைய சூழலில் பெற்றோல், எரிவாயு, டீசல் போன்றவற்றை மிகுந்த கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பெற்றோலியப் பொருட்களைத் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது அந்நியச் செலாவணியைச் சேமிப்பதோடு, போரின் பாதிப்புகளையும் குறைக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.



