போரதீவுப்பற்று பிரதேசசபையில் ஜனாதிபதி செயலணிக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தொல்பொருள் ஆய்வுக்கென நியமிக்கப்பட்டுள்ள செயலணிக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் செயலணியை ஜனாதிபதி இடைநிறுத்தவேண்டும் என்ற தீர்மானம் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் யோ.ரஜனியின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

நாட்டில் எந்த ஒரு மாகானத்திலும் தொல் பொருள் ஆய்வுக்குழு அமைக்காமல்  தமிழ் மொழி பேசும் இனத்தவர் பெருபான்மையாக வாழும்  கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டமையும் அதுவும் பெரும்பான்மை சிங்களவர்கள மொழியை சேர்ந்தவர்களை மாத்திரம் நியமிச்சமையும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக இங்கு தவிசாளரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கெதிராக  தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என   தவிசாளர் யோ.ரஜனியினால் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானம் சபை உறுப்பினர்களினால்  கட்சி பேதமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.