பதில் ஜனாதிபதியாக ரணில் நாளை பதவியேற்பு

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாளை காலை பதவியேற்கவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதில் அரச தலைவராக நாளை வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.