இந்திய தலைநகர் டெல்லியில் இலங்கை மக்களுக்கு ஆதரவாக பல்கலை மாணவர்கள் போராட்டம்

196 Views

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் கெளடில்யா மார்க் பகுதியில் உள்ள இலங்கை தூதரம் முன்பாக இலங்கை மக்களுக்கு ஆதரவாக  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது குரல் எழுப்பினர்.

இந்நிலையில், குறித்த மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

Leave a Reply