இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகல்: ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு

98 Views

சிங்கப்பூர் தப்பிச் சென்ற பிறகு அங்கிருந்து தமது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ. அவரது விலகல் கடிதத்தை ஏற்பதாக அறிவித்துள்ளார் இலங்கை  பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன.

இதையடுத்து ‘கோட்டா வீட்டுக்குப் போ’ (கோட்டா கோ கம) என்ற முழக்கத்தோடு போராட்டம் நடத்திவந்தவர்கள் தற்போது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து கோட்டாபாய, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. இதையடுத்து மே மாதம் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக நேரந்தது.

Leave a Reply