பசி பட்டியல்; பாகிஸ்தான், வங்காளதேசை விஞ்சிய இந்தியா

உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்தின்மை கொண்ட நாடுகள் பட்டியலில்  இந்தியா 102-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வு 117 நாடுகளில் நடத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் 77 நாடுகளில் இந்தியா 55-வது இடத்தில் இருந்தது.
உலகளாவிய, தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் பசி குறித்து  அளவிடுவதற்கும் கண்காணிப்பதற்கும், பசிக்கு எதிரான திட்டங்களில்  முன்னேற்றம் மற்றும் பின்னடைவுகளை மதிப்பிடுவதற்கும் வருடாந்திர குறியீட்டு பட்டியல்  வடிவமைக்கப்படுகிறது.
தெற்காசிய நாடுகளில் இந்தியா இப்போது பாகிஸ்தான் (94) வங்காளதேசம்  (88), இலங்கை (66) ஆகியவற்றுக்கும்  கீழே உள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவில் குழந்தைகள் வீணாக்கும் உணவு 20.8 சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது. இது மிக உயர்வான சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு வருட பசி பட்டியலிலும் இந்தியா பின்னோக்கியே செல்கிறது  என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்தியா இன்னும் அதன் பசி அளவில் தீவிரமாக பின்னோக்கி செல்கிறது. இதை உடனடியாக கவனத்தில் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது.
வெல்துங்கர்ஹில்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல்டுவைட் ஆகியவை  தயாரித்த அறிக்கையின்படி, கடுமையான பசி  உள்ள 45  நாடுகளில் இந்தியாவும் உள்ளது.
இந்தியாவில், ஆறு முதல் 23 மாதங்களுக்கு இடைப்பட்ட அனைத்து குழந்தைகளில் வெறும் 9.6 சதவீதம் பேருக்கு மட்டுமே குறைந்தபட்சம்  ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு அளிக்கப்படுகிறது. 2015-2016 நிலவரப்படி, 90 சதவீத இந்திய குடும்பங்கள் மேம்படுத்தப்பட்ட குடிநீர் ஆதாரத்தைப் பயன்படுத்தின. 39 சதவீத வீடுகளில் சுகாதார வசதிகள் இல்லை (ஐஐபிஎஸ் மற்றும் ஐசிஎஃப் 2017)  என அந்த அறிக்கைகள் கூறுகிறது.
கடந்த அக்டோபர் 2-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை ‘திறந்த மலம் கழித்தல் இல்லா நாடாக அறிவித்த அறிவிப்புக்கு முற்றிலும் மாறாக, “திறந்த மலம் கழித்தல் இன்னும் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது” என்றும் அறிக்கை கூறுகிறது.
2014 ஆம் ஆண்டில் பிரதமர்  நரேந்திர மோடி திறந்த வெளி மலம் கழிப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் இருப்பதை உறுதி செய்யும் ‘தூய்மையான இந்தியா’ திட்டத்தை தொடங்கினார்.
புதிய கழிவறை கட்டுமானத்துடன் கூட, திறந்த மலம் கழித்தல் இன்னும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலைமை மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது, இதன் விளைவாக குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வுகள் கிராமப்புற அல்லது நகர்ப்புற இந்தியாவா என்பதை அறிக்கை குறிப்பிடவில்லை.
பசியுடன் போராடுவதில் நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய தெற்காசியா நாடுகளின் முயற்சிகளையும் இந்த அறிக்கை பாராட்டுகிறது.