நளினி, முருகன் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

ராஜீவ் கொலை தொடர்பாக தண்டனை பெற்று வரும் கைதிகளான நளினி மற்றும் அவரின் கணவர் முருகன் ஆகியோர் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முருகன் இருந்த அறையில் ஒரு ஸ்மாட் கையடக்கத் தொலைபேசியும் 2 சிம் அட்டைகளும் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணைகள் தமிழ்நாடு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது.

இந்த நிலையில், சிறைச்சாலை விதிகளை மீறியதாகக் குறிப்பிட்டு, சிறையில் முருகனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் அடுத்த மூன்று மாதங்களுக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து முருகன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். இவரின் போராட்டம் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, தனது கணவரான முருகன் சிறைச்சாலையில் தனியறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக கூறி, கடந்த 26ஆம் திகதியிலிருந்து நளினியும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.