நல்லூரில் உருவாக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நல்லூர் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக சோதனைச் சாவடிகள் அமைப்பது பற்றி இன்று (04.08) பொலிசாரால் ஆராயப்பட்டது.  கோவிலுக்கு வரும் பக்தர்களை சோதனை செய்வதன் பின்னரே அனுமதிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கென யாழ். மாநகரசபையால் 3இலட்சம் ரூபா செலவில் 8 சோதனைக் கூடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இருந்தும் இன்னும் மேலதிகமாக 4 கூடுகள் தேவை என பொலிசாரால் கோரப்பட்டுள்ளது.

எனினும் இந்த சோதனைக் கூடுகள் எங்கே வைக்கப்பட வேண்டும் என்பது பற்றி யாழ். பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ். தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் இன்று ஞாயிற்றுக் கிழமை நேரில் ஆராய்ந்தனர். இவர்களுடன் யாழ். மாநகரசபை பொறியியலாளரும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வழமையாக அமைக்கப்படும் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த காலம் விடுமுறைக் காலம் என்பதால் பல இலட்சம் மக்கள் நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.