தொண்டு அமைப்புகளின் உதவிகளை நாடும் அகதிகள்

கொரோனா பெருந்தொற்று சூழல் தொடங்கிய பொழுது, அரசு உதவிகளிலிருந்து தவிர்க்கப்பட்ட சுமார் 1 இலட்சம் தஞ்சக் கோரிக்கையாளர்கள் வீடற்ற நிலையையும் பசியையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும் என தொண்டு அமைப்புகள் எச்சரிந்திருந்த நிலையில், புதிய கருத்துக்கணிப்பு ஒன்று அதனை நிரூபணமாக்கியுள்ளது.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் நடத்திய ஆய்வில் 3,500 தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொண்டு அமைப்புகளின் உதவிகளை நம்பியிருப்பதாகவும் அதில் 70 சதவீதமானோர் போதிய உணவின்றி தவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் படி, சுமார் 14 சதவீதமானோர் வீடற்ற நிலையையும் எதிர்கொண்டுள்ளனர்.

அதே சமயம், தொண்டு அமைப்புகளிடம் உதவிக்கோரும் தஞ்சக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலை நிலவுவதாகக் கூறப்படுகின்றது.