தொடரப்படக்கூடிய இடத்தில் விடப்பட்டபோதும் தொடரப்படாத போராட்டம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

போர் உக்கிரமாக இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதமளவில் போரின் போக்கு சிங்கள தேசத்தின் பக்கம் திரும்பியிருந்தது. தமிழ் இனத்தின் மீதான சிறீலங்கா அரசின் இனஅழிப்புக்கு 30 இற்கு மேற்பட்ட நாடுகள் உதவிகளை வழங்கியது தமிழருக்கு படைத்தரப்பு ரீதியாக பாரிய பின்னடைவைக் கொடுத்தது.

போரை எவ்வாறு தலைவர் பிரபாகரன் அவர்கள் நிறைவுசெய்யப்போகின்றார் என்ற பதற்றம் தமிழ் மக்களிடம் இருந்தது.

ஆனால் அனைத்துலக சமூகம் உன்னிப்பாக அவதானிக்கும் அல்லது பங்கெடுத்துள்ள இந்த போரில் சிங்கள அரசுகளின் இனஅழிப்பு முகத்தை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவருவதன் மூலம் அனைத்துலகம் இறுகப்பற்றிப் பிடித்துவரும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், இனஅழிப்பு என்ற பாதைகளின் ஊடாக தனது விடுதலைக்கான அடுத்தகட்ட நகர்வை தமிழ் இனம் மேற்கொள்ளும் என்று தலைவர் எண்ணியிருப்பார்.

அதற்கான தடையங்களை இனஅழிப்பு அரசு விட்டுச் செல்லும் என்பதும் அவருக்கு தெரியும். அவர் எதிர்பார்த்தது போல சிறீலங்கா அரசு தனது இனஅழிப்பை ஆதாரங்களுடன் மேற்கொண்டது, வைத்தியசாலைகள் மீதான தாக்குதல், வலிந்துகாணாமல் ஆக்கப்படுதல், சரணடைந்தவர்களை நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்தல், பாலியல் துன்புறுத்தல்கள் என சிறீலங்கா மேற்கொண்ட இனஅழிப்பு ஏராளம்.

அதற்கான சாட்சியங்கள் சேகரிக்கப்பட வேண்டும், அதற்கான உதவிகளை மேற்குலக நாடுகள் அல்லது அவர்கள் சார்ந்த அமைப்புக்களே மேற்கொள்ள முடியும், ஏனெனில் அதன் ஊடாகத் தான் அவர்களின் பூகோள கேந்திர அரசியல் நகர்வதுண்டு.

எனவே தான் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் ஓருபோதும் இணையவிரும்பாத அமெரிக்கா, போரின் போக்கு சிறீலங்கா அரசின் பக்கம் திரும்பியபோது 2008 ஆம் ஆண்டு மனித உரிமைகள் அமைப்பில் இணைந்து கொண்டது.

அன்று நாம் பலமாக இருந்தபோது உலகத்திற்கு எமது தேவை இருந்தது, எனவே போர் நிறுத்தத்திற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனாலும் இந்தியா என்ற பிராந்திய சக்தியை மீறி அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

எனினும் தமது அடுத்த கட்ட நகர்வாக போர்க்குற்ற ஆதாரங்களை சேகரிக்கும் பணியை முடுக்கிவிட்டிருந்தனர். அதனை சேகரித்தவர்கள் எல்லோரும் உலகில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகளில் பங்குபற்றிய மிகவும் தரம் வாய்ந்த அதிகாரிகள்.உதாரணமாக சிறீலங்கா படையினரே அதிகளவில் தமிழ் மக்களை படுகொலை செய்திருந்தனர் என்ற உண்மையை 2014 ஆம் ஆண்டு அனைத்துலக குற்றவியல் சான்றுக்கான வேலைத்திட்டம் என்ற அமைப்பு வெளியிட்டிருந்தது.5160WhRNfEL. SX334 BO1204203200 தொடரப்படக்கூடிய இடத்தில் விடப்பட்டபோதும் தொடரப்படாத போராட்டம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இந்த அறிக்கையை யூகோஸ்லாவாக்கியவில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைக்குத் தலைமை வகித்த திரு ஜேன் ரல்ஸ்ரன்,பிரித்தானியா மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் போராசிரியரும்,சிரோலியோனில் உண்மைகளைக் கண்டறிதலும்,இனநல்லிணக்கப்பாடும் என்ற குழுவில் பணியாற்றியவருமான வில்லியம் செபாஸ், காசாவில் உண்மைகளைக் கண்டறியும் குழுவில் பணியாற்றிய ஓய்வுபெற்ற கேணல் டெஜ்மொன்ட் ரவாஸ் மற்றும் சிறீலங்காவில் போர் இடம்பெற்றபோது அங்கு ஐ.நா தூதுவராக பணியாற்றிய கோடன் வைஸ் என்பவர்கள் தயாரித்திருந்தனர்.

இது,சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணையை மிக அண்மையாக கொண்டுவந்துள்ளதாக அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட பொதுசேவைகள் நீதிமையம் (PIAC) அன்று தெரிவித்திருந்தது.

தரம்வாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கைகள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் எல்லாம் அன்றைய சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சாவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சாவுக்கு எதிரானது என 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த வொசிங்டன் ரைம்ஸ் தெரிவித்திருந்தது.

அதேசமயம், பின்லாந்து நாட்டின் முன்னாள் அரச தலைவரும், நோபல் பரிசு பெற்றவரும், கம்போடியாவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டவருமான தேமி சில்வியா காட்ரைட் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒன்றும் சிறீலங்காவின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

சனல் 4 தொலைக்கட்சி, பிற்றர் சார்க்ஸ், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சன்டே ரைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றிய காலம் சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் மேரி கெல்வின் என நாம் இங்கு பலரைக் குறிப்பிடலாம்.article 1241581 07CAF8F8000005DC தொடரப்படக்கூடிய இடத்தில் விடப்பட்டபோதும் தொடரப்படாத போராட்டம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஊடகப்பிரிவு பணியாளர் இசைப்பிரியா தொடர்பான போர்க்குற்ற ஆதாரங்களையும் சனல் 4 இன் ஆசிய பிரிவு ஊடகவியலாளர் ஜொனார்தன் மில்லர் 2013 ஆம் ஆண்டு வெளிக்கொண்டந்திருந்தார்.

போரின் பின்னரான தேடுதல் மற்றும் துப்பரவு என்ற போர்வையில் சிறீலங்கா படையினர் பாரிய அளவிலான படுகொலைகளை மேற்கொண்டதாகவும், அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பலர் சரணடைந்தவர்களே எனவும் அனைத்துலக போர்க் குற்றவியல் வழக்கறிஞர் யூலியன் நோவல் தெரிவித்திருந்தார்.

சிறுவன் பாலச்சந்திரனின் இறந்த புகைப்படத்தை ஆய்வு செய்த தடவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக், சரணடைந்த சிறுவன் எவ்வாறு அருகில் இருந்து சுடப்பட்டார் என்பதை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட குற்றத் தடயவியல் நிபுணர் பேராசிரியர் பௌண்டரும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐ.நா அமைத்த மூவர் கொண்ட நிபுணர் குழுவும் 70,000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியிருந்தது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் ஆகியோர் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட ஆதரங்களும் உள்ளன. இது தொடர்பான ஆதாரங்கள் ஐ.நா குழு, அனைத்துலக மன்னிப்புச்சபை, அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் என பல அமைப்புக்களிடம் உள்ள. அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் காணாமல் போனதும் இதில் அடங்கும்.

முன்னர் ஐ.நா நிபுணர் குழுவில் பணியாற்றியவரும் உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக செயற்திட்ட அமைப்பின் பணிப்பாளருமன ஜஸ்மின் சூக்காவும் பெருமளவான ஆதாரங்களை சேகரித்து வருகின்றார்.

அதாவது பெருமளவான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான உயிருள்ள சட்சியங்களும் உலகம் எங்கும் பரவி வாழ்கின்றனர். ஐ.நாவும் பல தீர்மானங்களை கொண்டு வந்திருந்தது.

ஜேர்மனின் பேர்மன் பகுதியில் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வில் சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இனஅழிப்பில் ஈடுபட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டடிருந்தது. இதன் முதலாவது அமர்வு அயர்லாந்தின் டப்பிளின் பகுதியில் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது.download 5 தொடரப்படக்கூடிய இடத்தில் விடப்பட்டபோதும் தொடரப்படாத போராட்டம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அதிக அனுபவம் வாய்ந்த அனைத்துலக நாடுகளின் முன்னனி பல்கலைக்கழகங்களின் போராசிரியர்கள் உட்பட 11 நீதியாளர்கள் இந்த அமர்வில் பங்குபற்றியிருந்தனர்.

எனவே எமது விடுதலைப் போரானது புதிய பாதைஊடாக விரைவாக நகர்வதற்குரிய இடத்தில் தான் கையளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை நாம் இன்று தவறவிட்டுள்ளோம். இது தொடர்பில் நான் ஓவியர் புகழேந்தியுடன் பேசும்போது அவர் கூறினார் எந்த இனத்திற்கும் கிடைக்காத ஒரு அரிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது ஆனால் நாம் அதனை தவறவிட்டுள்ளோம் என்று. உண்மைதான். அதற்கு காரணம் யார்?

பேரழிவைச் சந்திக்கும் இனம் ஓரணியில் இணைந்து மேலும் வலுப்பெறும் என்பதே வரலாறு. யூதர்களின் ஒருங்கிணைவும், பல வருடங்களின் பின்னர் மீண்டும் இணைந்த கிழக்கு, மேற்கு ஜேர்மன் மக்களும் அதனை தான் கூறுகின்றனர்.

ஆனால் இங்கு எமது எதிர்பார்ப்பைவிட எதிரியின் எதிர்பார்ப்பே நிகழ்ந்தது. தாயகத்திலும், புலத்திலும் தமிழினம் சிதறிப்போயுள்ளது. புலம்பெயர் தேசங்களில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் முடிவு இது.

எனவே தான் கடந்த 11 வருடங்களாக எமது போராட்டம் தேங்கிபோயுள்ளது, அனைத்துலக சமூகமும் குறிப்பாக மேற்குலகமும் எம்மைக் கைவிட்டு சிறீலங்கா பக்கம் செல்ல முனைந்து நிற்கின்றது. அதாவது 2009 இற்கு முன்னர் அனைத்துலக மட்டத்தில் இருந்த அடையாளத்தை தமிழ் இனம் தொலைத்து நிற்கின்றது.

தாயக அரசியல் பதவிமோகம்,விலைபோதல்,ஊழல் என இலக்கை தூரஎறிந்துவிட்டு துண்டுதுண்டாக கிடக்கின்றது.  தமிழ் கட்சிகள்.புலம்பெயர் தேசங்களிலும் சந்திக்கு சந்தி சங்கம் வைத்து சண்டைபிடிப்பதியிலே காலத்தை கடத்துகிறோம்.

“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே.” என்ற பொருந்தலைவனின் வழிவந்தவர்கள் கூட தங்களிடையே ஒரு பொதுவான ஒருமைப்பாட்டுக்கு வரமுடியாமல்சிதறிக்கிடந்து ஒருவர்மேல் ஒருவர் சேற்றை வாரியடிப்பது இனத்திற்கே தலைகுனிவு,மிக வேதனையான விடயமும் கூட.

இவற்றால்தான்  தொடரப்படக்கூடிய இடத்தில் வலுவான ஆதாரங்களுடன் விடப்பட்ட போராட்டத்தையும் நாம் தொடரமுடியாத நிலையில் நிற்கின்றோம். இதற்கு காரணமாக அமைப்புக்களையும், நபர்களையும் எமது போராட்டத்தை சிதைத்தவர்களாகவே தமிழ் இனம் தனது வரலாற்றில் பதிவு செய்துகொள்ளும்.

எனவே எமது விடுதலைக்காக நாம் மிகவிரைவாக ஒருங்கிணைவதுடன், விடுதலை ஒன்றே எமது இலக்கு என்ற சிந்தனையுடன் எல்லோரும் ஒரு அணியில் பயணிக்க வேண்டும் அதுவே சிறீலங்கா அரசின் இனப்படுகொலையில் அழிவைச் சந்தித்த எமது மக்களுக்கும், போராளிகளுக்கும் நாம் செய்யும் தூய்மையான அஞ்சலியாகும்.