சம்பளம் வழங்கமுடியாத நிலையில் அரசாங்கம் – சம்பிக்க

அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்க முடியாத நிலையில் சிறீலங்கா அரசு காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று (11) தெரிவித்துள்ளார்.

டிசம்பர் முதலாம் நாள் முதல் செல்வந்தர்களுக்கு வரி நிவாரணம் வழங்கும் தனது நடவடிக்கைகள் மூலம் சிறீலங்கா அரசு தனது வருமானத்தில் 30 விகிதத்தை இழந்துள்ளது.

எனவே தற்போது ஊழியர்களுக்கான சம்பளத்தையும், கடனுக்கான வட்டியையும் செலுத்திய பின்னர் எதுவும் செய்யமுடியாத நிலைக்கு அரசு தள்ளப்படும். எனவே தற்போது அரச ஊழியருக்கு சம்பளம் வழங்கமுடியாத நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.