தேர்தல்கள் ஆணைக்குழுவினரை சந்தித்த எதிர்க்கட்சிகள்

02. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன்இ பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன்இ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ ரவூப் ஹக்கீம்இ ராதாகிருஷ்ணன்இ நிசாம் காரியப்பர் உள்ளிட்டவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

‘எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தீர்மானம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு உட்படாமல் சுயாதீனமாக செயற்பட வேண்டும்’ என்று இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம்இ எதிர்க்கட்சிகள் கேட்டுக்
கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் எவரும் பங்கேற்றிருக்கவில்லை. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ‘வரவு செலவு திட்டம் இறுதி செய்யப்பட்டதன் பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான பணிகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கையை முன்வைத்ததாக’ தெரிவித்தார்.

‘தற்போது வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று வருவதுடன்இ எதிர்வரும் 25 ஆம் திகதி அது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படும்’. ‘அதன்பிறகுஇ குழு நிலை விவாதம் நடத்தப்படும் என்பதுடன்இ சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த காலகட்டத்தில் சட்டவாக்கப் பணிகளைச் செய்வதற்கு உறுதிபூண்டுள்ளனர்’.

இந்த வரவு செலவு திட்ட விவாத காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பை வழங்கிஇ தேர்தல் பணிகளில் அவதானம் செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளைஇ ‘உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்படும்’ என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் பிரதி தங்களுக்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர்இ மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.