மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த கான்ஸ்டபிள் கைது

பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மல்லாவி காவல்நிலைய கான்ஸ்டபிள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மதுபோதையுடன் யோகபுரம் பகுதியில் உள்ள பாடசாலையின் மலசலகூடத்திற்கு சென்று 3 மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த மாணவிகளின் பெற்றோர்களால் கான்ஸ்டபிள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பின்னர் இந்த விடயம் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையஇ மல்லாவி காவல்துறையினரால் சந்தேகநபரான கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் சந்தேகநபர் இன்று (18) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்டபோதுஇ அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படிஇ அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.