தெற்காசிய நாடுகளில் பாலின சமத்துவமின்மையை சரிசெய்ய 195 ஆண்டுகளாகும் – ஆய்வில் தகவல்

தெற்காசிய நாடுகளில் பாலின சமத்துவமின்மையை சரிசெய்ய 195 ஆண்டுகளாகும் என தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள பன்னாட்டு பொருளாதார குழுமம், உலக அளவில் 156 நாடுகளிடம் நடத்திய ஆய்வின் முடிவில் இந்தியா 140ஆவது இடத்தில் உள்ளகத் தெரிவித்துள்ளது.

பன்னாட்டு பொருளாதார குழுமம் ( World Economic Forum) என்ற அமைப்பு பாலின சமத்துவமின்மையால் உருவாகும் பாலின இடைவெளிகுறித்து இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அரசியல் பங்களிப்புக் குறித்து இந்த ஆய்வு கவனம் செலுத்தி இருக்கிறது.

இந்த அய்வின் முடிவின் படி கணக்கிடப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா 0.625 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மேலும், கடந்த முறை எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவின் அடிப்படையில் 28 இடங்கள் பின்னடைவை சந்தித்து தற்போது 140ஆவது இடத்தில் உள்ளது.