தீவிரவாத இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்ட இந்தோனேசியர் பிலிப்பைன்சில் படுகொலை 

பிலிப்பைன்சில் இயங்கும் AbuSayyaf எனும் தீவிரவாத அமைப்பினால் கடத்திச் செல்லப்பட்டு பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்த இந்தோனேசியர் ஒருவர், பிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கும் அந்த் அமைப்பிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். இத்தகவலை இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்  Retno Marsudi உறுதி செய்திருக்கிறார். 

இத்துப்பாக்கிச் சூட் சம்பவம் பிலிப்பைன்சி  Sulu மாகாணத்தில் உள்ள Patikul எனும் பகுதியில் நடந்தேறியுள்ளது.

கடந்த ஜனவரி 16ம் தேதி மலேசியாவின் சாபா மாநிலத்தின் கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுப்பட்டிருந்த 8 இந்தோனேசியர்கள் AbuSayyaf அமைப்பினரால் கடத்தப்பட்டிருந்தனர். அதில் 3 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் 5 பேரை பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் பணயக்கைதிகளாக சிக்கியிருக்கின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில், இவ்வாறு 34 இந்தோனேசியர்கள் இந்த தீவிரவாத அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றமை இங்கு  குறிப்பிடத்தக்கது.