
தியாகி திலீபனின் கோரிக்கையை ஏற்காத இந்திய அரசின் சதியால் தியாகச்சாவை தழுவிக்கோண்டார் தியாகி திலிபன். அவர் உயிர் நீத்து சரியாக 06, மாதம்,13, தினங்களில் அன்னை பூபதியின் கோரிக்கையை ஏற்பார் கள் என நினைத்து அன்னைபூபதியை சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவதற்கு அன்னையர் முன்னணி ஏன்முன்வந்தார்கள்?
24, அகவை இளைஞனின் தியாகத்தை உதாசீனம் செய்த இந்திய நாடு 56, அகவை அன்னை பூபதியின் தியாகத்தை மதிப்பார்கள் என எப்படி மட்டக்களப்பு, அம் பாறை மாவட்ட அன்னையர் முன்னணி எடைபோட்டது?
1987, யூலை,29, ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் பாரதப்பிரமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தனா வுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது. அமைதிப்படை என்ற பெயரை சூட்டி இந்திய இராணுவம் இலங்கையில் 1987,யூலை,30, ல் வடகிழக்கு முழுவதும் ஆக்கிரமித்தது.
1987, ஆகஸ்ட் ,04, ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுதுமலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை யாற்றினார். அதில் தெளிவாக “தமிழரின் உடன் பாடு இன்றியே இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது” என கூறினார். இந்த உரை சுதுமலை பிரகடனம் எனப்படுகிறது.
இந்த உரை இடம்பெற்று மறுநாள் 1987,ஆகஸ்ட் 05, ல் விடுதலைப்புலிகள் ஆயுதங் களை இந்தியப்படையினரிடம் கையளித்தனர்.
இந்திய அரசின் ஒப்பந்தம் தமது நலனும், இலங்கை அரசின் நலனும் கொண்டதாக உள்ளது. ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்து எதுவுமே இல்லை என்பதை உணர்ந்த விடுதலைப்புலிகள் ஆயுதங்களை உங்களை நம்பி ஒப்படைத்துவிட்டோம் ஆனால் தமிழி னத்தின் உடனடி விடயங்களில் அக்கறை காட்ட இலங்கை அரசை நிர்பந்திக்கும் படி யாக காந்தீயவழியில், அறப்போரை, அகிம் சாவாதத்தை மதிக்கின்ற நாட்டுக்கு அதே அகிம்சை ரீதியாக ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப்போராளி ஒருவரைக்கொண்டு சாகும்வரை உண்ணாவிரதம் மூலமாக அற வழிப்போராட்டம் செய்வதன் மூலமாக நிச்ச யமாக இந்திய அரசு அதனை கருத்தில் கொள் ளும் என்ற நம்பிக்கையில் 1988, செப்டம்பர்,19, ல் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளி தியாகி திலிபன் ஐந்து அம்சக் கோரிக்கைகள் முன்வைத்து உண்ணாவிரதத்தை யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் முன்றலில் தொடங்கினார்.
இந்த ஐந்து கோரிக்கைகளும் விடுதலைப்புலிக ளின் கோரிக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
1. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடு விக்கப்பட வேண்டும்.
2. தமிழ் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
3. மறுவாழ்வு என்ற பெயரில் தமிழர்களின் தாயகப் பகுதிகளில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
4. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் அமைப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
5. இடைக்கால நிர்வாகக் சபை அமைக்கப்படும் வரை, இடைக்காலக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
ஈழத்தமிழினத்தின் தாயத்தில் எதிர் கொள்ளும் அன்றாட பிரச்சனைகளாக இனம்காணப்பட்ட இந்த கோரிக்கை யையே அன்று தியாகி திலீபன் முன்வைத்தார். தமிழீழம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை சரியாக 12, தினங் கள் நீர் கூட அருந்தாமல் அந்த போராளி திலிபன் 1987, செப்டம்பர்,26, ல் எம்மை விட்டு ஆகுதியானார்.
தியாகி திலீபனின் இந்த கோரிக்கையை மதிக்கா மல் அவரின் உயிர் போக காரணமான இந்தியாவின் செயல் உலகத்திடம் இந்தியாவின் சதியை வெளிக்காட்டியது. தியாகி தீலிபனின் உண்ணாவிரதத்தை உதாசீனம் செய்த இந்தியநாடு அவர் விடுதலைப்புலிகளின் போராளி என்பதால் தான் அதனை கருத்தில் எடுக்காமல் விட்டிருக் கலாம், தியாகி திலீபனின் ஐந்து கோரிக்கைகளும் இலங்கை அரசுடன் இணங்கி இந்தியா அழுத்தம் கொடுத்து நிறைவேற்றும் தீர்மானங்கள் என்பதால் அதனை இலங்கை அரசுமீது காரணம் காட்டி தாம் உத்தமர்கள் என தப்பிக்க கூட தியாகி திலிபனின் நியாயமான கோரிக்கைகளை இந்தியா தட்டிக்கழித்து இருக்கலாம் இதனை கருத்தில் கொண்டே கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் போராளி அல்லாத ஒரு சாதாரணகுடும்பத்தலைவியான தமிழ் தாய் ஒருவர் மூலமாக இலங்கை அரசை நோக்கி அழுத்தம் கொடுக்காத இந்தியாவால் மட்டும் மிக இலகுவாக செய்யக்கூடிய இரண்டே இரண்டு கோரிக்களை முன்வைத்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி சாகும்வரை உணவுத்தவிர்ப்பு போராராட்டம் நடத்த தீர்மானித்தனர்.
அந்த இரண்டு மிகவும் இலகுவான இந்தியாவால் செய்ய கூடிய கோரிக்கைகளான
1. உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும்.
2. விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும்.
போர்நிறுத்தம் இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளுடன் போரிடும் போரை நிறுத்தவேண்டும், அதன்பின்னர் விடுதலை புலிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டும். இந்த கோரிக்கை இரண்டுமே இலங் கையை இழுக்கவில்லை.
இந்த கோரிக்கைதான் அன்னையர் முன்னணியின் கோரிக்கை இந்த கோரிக்கையுடன் உண்ணாவிரதம் யார் இருப்பது என்பது குறித்து கடும்போட்டி நிலவியது. அன்னை பூபதியும் முன்னுரிமை கோரினார். அன்னம்மா டேவிட்டும் முன்னுரிமை கோரினார். இதனால் சீட்டுக்குலுக்கிப்போட்டு ஒருவரை தெரியலாம் என்று இறுதி முடிவாக சீட்டு மூலம் அன்னமா டேவிட் தேரிவானார்.
1988,பிப்ரவரி,19,ல் அன்னம்மா டேவிட் மட்டக் களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயில் முன்
பாக சாகும்வரை தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அன்னம்மா டேவிட் மரணமடைந் தால் , அதனை ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப் போடப்படும் என இந்திய அமைதிப்படை மிரட்டியது. ஆனாலும் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், அவரின் பிள்ளைகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை எச்சரித்து பலவந்தமாகத் தங்களது தாயாரை உண்ணாவிரதத்தில் ஈடு படுத்தி உள்ளார்கள் என்றும் தங்கள் தாயை மீட்டுத்தாருங்கள் என்றும் அவர்களின் கையொப் பத்துடன் கடிதம் எழுதி இந்தியப்படை வாங்கியது அந்தக் கடிதத்தை காட்டி அன்னம்மா டேவிட் அவர்களை உண்ணாவிரத மேடையில் இருந்து இந்தியப்படை தூக்கிச் சென்றது.
அதன்பின்னர் ஏறக்குறைய ஒரு மாதம் கடந்த நிலையில் 1988, மார்ச்,19, சனிக்கிழமை காலை 10,45, மணிக்கு அன்னைபூபதி உண்ணா நோன்பு ஆரம்பித்தார். மாமாங்கப்பிள்ளையார் ஆலய குருந்த மரத்துக்கு கீழ் அமைத்த மேடையில் ஏறி தான் சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினை விழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி ஏற்பாட்டாளர்களிடம் கொடுத்த பின்னர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
முதல் நாளே நாலா திசையிலும் இருந்து மக்கள் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் குவிந்தனர் அடுத்ததடுத்த தினங்களில் மட்டக்களப்பு மாவட்டம், அம்பாறை மாவட்டம் பகுதியில் இருந்தும் சனத்திரள் கூடியது அன்னையர் முன்னணி அடையாள உண்ணாவிரதத்தைத் தொடர் உண்ணாவிரதமாக்கியது. இதன் எழுச்சி கண்டதும், பிரதமர் ராஜீவ் காந்தி “அமைதிப்படை தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடவில்லை; புலிகளுக்கு எதிராகவே பேராடுகிறது” என்று இந்திய ஊடகங்களில் கூறினார்.
அன்னையர் முன்னணியினரைப் பேச்சு வார்த் தைக்கு அமைதிப்படை அழைத்தது. இந்தியப்படை பிரி கேடியர் சந்தோஷ் அவர்களும் அன்னையர் முன்னணி சார்பாக அதன் தலைவர் சுமத்திராதேவி, ஏற்பாட்டு குழு ஆலோசகர் கிங்ஸ்லி இராசநாயகம் இலங்கைத் தமிழாசிரியர் சங்கத்தலைவர் வணசிங்கா, கத்தோலிக்க மதகுரு அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ, ஆகியோர் கலந்துகொண்டனர் இந்தியபடை தளபதி சந்தோஷ் “விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் அதன்பின்னரே பேச்சுவார்த்தை’ என்ற நிபந்தனையை விதித்தார்.
அன்னையர் முன்னணியின் நியாய மான கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உண்ணா விரத்த்தை எப்படி நிறுத்தலாம், குழப்பலாம் என்ப தையே இந்தியபடை சிந்தித்தது. அன்னையர் முன்னணி சார்பாக கலந்து கொண்ட வர்கள் முதலில் போர் நிறுத்தத்துக்கு சம்மதியுங் கள் பின்னர் பேச்சுவார்தையில் அடுத்த வற்றை பரிசீலிக்கலாம் என்றனர், விடாப்பிடியாகவே இந்திய தளபதி சந்தோஷின் கோர முகம் தென்பட்டது அதனால் பேச்சு இணக்கப்பாடு இன்றி உண்ணாவிரதம் தொடர்ந்தது.
அதன்பின்னர் அப்போது 1988, ல் இலங்கைக்கான இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என்.தீட்சித்தும் “புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்’ என்று மீண்டும் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை. அடுத்து சில தினங்களில் மாமாங்கம் கோயிலை சூழ உள்ள பகுதியை இந்திய ராணுவம் சுற்றிவளைத்தது. ராணுவ முகாம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டது. 1988, மார்ச், 21,22,23 நாட்களில் மட்டக்களப்பு மாநகரப்பகுதி எங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அன்னைபூபதியின் சுற்றுவட்டத்தில் அவருக்கு ஆதரவாக கூடிய அன்னையர் முன்னணி தலைவர் உறுப்பினர்கள் தாய்மார்கள் பயப்பட வில்லை. எழுந்தும் செல்லவில்லை. மேலும் மேலும் கூடினர்.
இந்திய இராணுவத்தின் கோரமுகம் மேலும் தொடர்ந்தது உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி யவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. தியாகச்சுடர் அன்னை பூபதி உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக 31, தினங்களில் 1988, ஏப்ரல்,19, செவ்வாய்க்கிழமை அன்று காலை 08. 45, மணிக்கு அவர் உயிர் நீத்தார்.
எந்த ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக அன்னை பூபதி அவர்கள் போராடினாரோ அந்த இந்திய இராணுவம் பாரிய இழப்புக்களுடனும் அளவிடற்கரிய அவமானத்துடனும் தமிழீழத்தை விட்டு 1990,மார்ச்,24, ல் அன்று வெளியேறிச் சென்றது. அன்னை பூபதியின் நினைவுநாள் ஈழத்தில் நாட்டுப்பற்றாளர் நாளாக என்றும் நினைவு கூரப்படுகிறது.இந்திய இராணுவம் 1987,யூன்.02, ல் யாழ்ப்பாணம் வடமராச்சி தொடக்கம் 1990, யூன்,14, கிழக்குமாகாணத்தில் மூதூர் பீரங்கி தாக்குதல் வரை அவர்கள் ஈழத்தில் நிலைகொண்டு இருந்த மூன்று வருடத்தில் 369, இடங்களில் தமிழர்களை படுகொலை செய்துள்ளர் இதற்கு பெயர்தானா “இந்திய அமைதிப்படை” என்பதை புரிவது நல்லது.
தியாகி திலிபனின் தியாகத்தை அவர் விடுத லைப்புலிகள் போராளி என காட்டி தப்பிக்க நினைத்த இந்திய அரசு, ஒரு குடும்பத்தலைவியின் தியாகத்தையும் உதாசீனம் செய்தது இந்தியாவின் போலி காந்தீயக்கொள்கை என்பதை அன்னைபூபதி அனைத்துலகிற்கும் நிருபித்தார் என்பதே சரித்திரத்தில் இடம்பிடித்தது.



