தாய்வான் போர் 10 றில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தும்

தாய்வான் தொடர்பான அமெரிக்காவினதும், சீனாவினதும் போர் உலகின் பொருளாதாரத்தில் 10.2 விகித வீழ்ச்சியை ஏற்படுத்தும் இது 10 றில்லியன் டொலர்கள் என புளும்பேர்க் ஊடகம் தெரிவித்துள்ளது.

எனவே இந்த போரை தவிர்ப்பதற்கு எல்லா தரப்பினரும் முன்வரவேண்டும். 1949 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவடைந்த பின்னர் தயாவான் சுயாட்சி அதிகாரம் கொண்ட மாநிலமாக உள்ளது. அது அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளது. எனவே சீனா அதனை தன்னுடன் இணைக்க விரும்பினால் அதனை அமெரிக்கா எதிர்க்கும்.

Taiwan war தாய்வான் போர் 10 றில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தும்அதனை சமாதான வழிகளில் மேற்கொள்ள சீனா முயல்கின்றது. ஆனால் தாய்வான் தன்னிட்சையாக சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தினால் அதனை சீனா படை நடவடிக்கை மூலம் முறியடிக்கும் என சீனா தெரிவித்துள்ளது.

தாய்வான் சீனாவுடன் இணைக்கப்படும் என புதுவருட உரையிலும் சீனா அதிபர் தெரிவித்துள்ளார். செமிகொண்டகடர் எனப்படும் இலத்திரனியல் பொருட்களை உற்பத்தி செய்வலதில் தயாவான் முன்னியில் உள்ளது. கணணிகள், செல்லிட தொலைபேசியகள் மற்றும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்கள், ஆயுதங்கள் போன்வற்றிற்கு அது முக்கியமானது. அது முக்கியமான கடல்வழிப் பாதையுமாகும்.

இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன ஒன்று ஒரு வருடத்திற்கு தாய்வான் கடல் பாதையை சீனா மூடலாம், அது உலக பொருளாதாரத்தில் 5 விகித வீழ்ச்சியை ஏற்படுத்தும், இரண்டாவது சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான முழு அளவிலான போர் இது இரண்டு மடங்கு இழப்பை ஏற்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.