பொருளாதாரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இந்தியாவின் மணிபூர் இனக்கலவரம்

இந்தியாவின் மணிபூர் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் இனக்கலவரம் அங்குள்ள மக்களின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு பல இன மக்களும் பல பூர்வீக குடி மக்களும் வாழந்து வருகின்றனர். அதிகளவில் இந்துக்களைக் கொண்ட மெறி இனமக்களும், கிறிஸ்த்தவர்களை அதிகம் கொண்ட நாகா மற்றும் குகி இன மக்களும் அங்கு வாழ்கின்றனர்.

Manipur India பொருளாதாரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இந்தியாவின் மணிபூர் இனக்கலவரம்2.3 மில்லியன் மக்கள் தொகையில் மெறி இனமக்கள் 51 விகிதமாகும். ஆனால் அவர்கள் 10 விகிதமான நிலப்பகுதிகளில் தான் வாழ்கின்றனர். ஏனைய இனமக்கள் 90 விகிதமான மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர். ஆனால் அரசியல் மற்றும் ஏனைய துறைகளில் மெறி இனமக்களே அதிகம் பங்கெடுக்கின்றனர்.

கடந்த மே மாதம் முதல் அங்கு இடம்பெற்றுவரும் வன்முறைகளில் இதுவரை 180 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்னர். பெருமளவான வர்த்தக நிலையங்கள் மற்றும் வதிவிடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. பணவிக்கம் 12 விகிதமாக அதிகரித்துள்ளது. இணையத்தள வசதிகள் பல நாட்களாக முடக்கப்படுவதால் வியாபாரங்கள் அதிகளவு பாதிப்புபடைந்துள்ளன.

தினமும் 40,000 ரூபாய்களுக்கு பழங்களை விற்பனை செய்யும் நான் தற்போது 4000 ரூபாய்களுக்கே விற்பனை செய்வதாக பழங்கனை விற்பனை செய்யும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். பல வியாபார நிலையங்கள் 70 விகிதமான வர்த்தகத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.