தமிழர் தாயகப் பகுதியிலுள்ள சிறிலங்கா படையினர் வெளியேற்றப்பட வேண்டும் – பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர்

தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்கா படையினர் வெளியேற்றப்பட வேண்டுமென பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் Rt.Hon Jeremy Corbyn வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக லண்டன் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அனுமதிக்க மறுத்து வரும் இலங்கை அரசிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பேசிய தொழிற்கட்சியின் நிழல் சர்வதேச வர்த்தக அமைச்சர் Barry Gardiner, இலங்கை சர்வதேச வர்த்தக அனுகூலங்களை தொழிற்கட்சி மனித உரிமை பதிவேட்டில் நிபந்தனைக்குட்படுத்துவதை உறுதி செய்யும் என்றார்.