தமிழக மீனவர்களை கொன்றது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்: இலங்கைக்கு  இந்தியா கண்டனம்

தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர்   கொன்ற செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

“கடந்த மாதம் 19-ம் திகதியிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் காணாமல் போனார்கள். அடுத்த 4 நாட்களுக்குப்பின் இலங்கை கடற்படையினர், அந்த 4 மீனவர்கள் உடலும், பாக்ஜலசந்தி பகுதியில் மிதப்பதாகத் தெரிவித்தார்கள்.

தமிழக மீனவர்களின் படகு, தங்கள் கடற்படை ரோந்து கப்பலில் மோதியதாகத் தெரிவித்தார்கள். ஆனால், தமிழக மீனவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு, இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளார்கள். இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள்.

இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”என திருச்சி சிவா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை முக் வைத்தனர்.

இந்நிலையில், “தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை அரசிடம் கடுமையான கண்டனத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. அதிலும் இந்த குறிப்பிட்ட சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என இலங்கை அரசிடம் இது தொடர்பாக மிக, மிக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது”  என்றார்.