தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

மேல் மாகாணத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 1223 நிறுவனங்களுக்கு எதராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இது வரையில்,கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 445 ஆக காணப்படுகின்ற அதே நேரம் 305 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  தொரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் கடுமையான சுகாதார நடைமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மேல் மாகாணத்தில் காணப்படும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையில் இது வரையில் 9 ஆயிரத்து 495 நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதில் 1,223 நிறுவனங்களில் முறையான சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றம்சுமத்தியுள்ளார்.

மேலும் கடந்த வருடம் அக்டோபர் 15ம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, அனைத்து நிறுவனங்களையும் சுகாதார விதிகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்ற போதும், சில நிறுவனங்கள் அந்த அறிவுத்தல்களை பின்பற்றுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்,  அறிவுறுத்தல்களை பின்பற்றாத குறித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.