அகதி முகாமில் இருந்து காணாமல் போன ரோஹிஞ்சா முஸ்லீம்கள்

இந்தோனேசியாவின் அச்சே மாநிலத்திலுள்ள அகதி முகாமில் இருந்து நூற்றுக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களைக் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மியன்மாரில் 2017ஆம் ஆண்டு அந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைக்கு அஞ்சி சிறுபான்மை ரோஹிஞ்சா முஸ்லிம்கள் 750,000 பேர் அங்கிருந்து இந்தியா,இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு புலம்பெயர்ந்தனர்.

அவர்களில் பலர் வங்க தேசத்தின் Cox’s Bazaar அகதி
முகாம்களில்  தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் மலேசியாவுக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை சுமார் 400 ரோஹிஞ்சா முஸ்லீம்கள் அந்த அகதி முகாமிற்குச் சென்று சேர்ந்தனர்.அவர்களில் 112 பேர் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளனர்.